நடிகை தேவயானியின் மகள் 12வது தேர்வில் எவ்வளவு மதிப்பெண் வாங்கியுள்ளார் தெரியுமா?

நடிகை தேவயானி
நடிகை தேவயானி மிகவும் சாப்ட்டான முகம், எப்போதும் லட்சணமாக புடவை, தாவணி என குடும்ப பாங்கான கதைகளில் நடித்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.

படங்களில் மார்க்கெட் இல்லை என்றதும் அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார். கோலங்கள் என்ற மெகா தொடரில் நடித்து இப்போதும் ரசிகர்கள் அபி என்று முதலில் அடையாளப்படுத்துகிறார்கள்.

பின் இடையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வந்தார், இப்போது அதுவும் முடிந்துவிட்டது.

நடிகையின் மகள்
தேவயானி இயக்குனர் ராஜகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகள்களை பெற்றார். இப்போது அவர்களும் வளர்ந்துவிட்டார்கள். இந்த வருடம் தேவயானியின் மூத்த மகள் 12 தேர்வு எழுதியுள்ளாராம்.

அவரது மதிப்பெண் விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவரது மகள் 600க்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த மதிப்பெண் விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.