ஹைதராபாத்தில் பெரிய வீடு வாங்கி நடிகை சமந்தா

நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகிகளில் ஒருவர் தான் சமந்தா.

இவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் குணமாகி இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.

புதிய வீடு
நாக சைத்தன்யா விவாகரத்திற்கு பிறகு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல சமந்தா அதே வீட்டில் வசித்து வந்தார்.

ரூ. 100 கோடி மதிப்புக்கொண்ட அந்த வீட்டிற்கு கூடுதல் பணம் சமந்தா செலுத்தியதாகவும் இதனால் வீடு அவரிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13 ஆவது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.