தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீவித்யா கடந்த 2006 -ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
ஸ்ரீவித்யா தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் பல நபர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம். இவருக்கு கடைசி ஒரு முறையாவது கமல் ஹாசனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம்.
ஸ்ரீவித்யாவின் நிலைமையை அறிந்த கமல் உடனடியாக அவர் சந்தித்துள்ளார். நோயால் பாதிக்கப்பட்டு ஸ்ரீவித்யாவை பார்த்து கமல் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.