கவின்
சின்னத்திரை டு வெள்ளித்திரை வந்த நடிகர்களின் கவினும் ஒருவர். அவர் சின்னத்திரை தொடர்கள் மற்றும் பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆகி சினிமாவில் நுழைந்தவர் கவின். அவர் லிப்ட், டாடா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
டாடா படம் சமீபத்தில் ஹிட் லிஸ்டில் இணைந்த முக்கிய படமாக மாறி இருக்கிறது. அதனால் கவின் தனது மார்க்கெட் உயர்ந்து இருப்பதாக நம்புகிறார்.
சம்பளம்
இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு 2 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். அதனால் அவரை 1 கோடிக்கு கமிட் செய்த நிறுவனம் தற்போது பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.