சினேகா-பிரசன்னா
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் இணைந்த ஒரு காதல் ஜோடிகளில் சினேகா, பிரசன்னாவும் உள்ளார்கள்.
இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு மே 11ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு இப்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட திருமணத்தில் முடிந்தது.
பிரசன்னாவின் பதிவு
இந்த நிலையில் தங்களது 11வது வருட திருமண நாளை முன்னிட்டு சினேகாவிற்காக பிரசன்னா ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாகும்.
உன்னை என் துணையாக பெற்றதற்கு நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய் என நிறைய மனதில் இருப்பதை கூறி பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram