பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் ஒரு படம். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை படமாக்க எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே முயற்சிகள் நடந்து வந்தது.
ஆனால் பலரின் முயற்சிகள் தோற்றுப்போக கடைசியில் மணிரத்னம் அவர்களால் நிறைவேறியது.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களும் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறது.
படத்தின் 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 330 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
அதேபோல் தமிழகத்தில் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.