அழகி திரைப்படம்
தமிழ் சினிமா ரசிகர்களால் என்றைக்கும் மறக்கவே முடியாத சில ஹிட் படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் அழகி.
2002ம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இரண்டரை கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடிகர் சதீஷ் நடித்திருப்பார். இந்த படத்தில் மட்டுமே சதீஷ் இப்போது சில பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தற்போது அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் அழகி படத்தில் நடித்தவரா இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இப்படத்திற்கு பிறகு சதீஷ் எந்த படங்களும் நடிக்கவில்லை.
அதேபோல் சதீஷ், பரத் நடித்த காதல் மற்றும் தனுஷின் தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் நண்பர்களுடன் இணைந்து சொந்த தொழில் செய்து வருகிறாராம்.