ஃபர்ஹானா
ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது.
இருப்பினும் அதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர், படத்தில் எந்த மதத்திற்கு எதிரான கருத்துகளும் இல்லை என கூறி இருக்கின்றனர்.
காட்சிகள் ரத்து
சர்ச்சை எழுந்ததால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருவாரூரில் இருக்கும் தியேட்டர்களில் ஃபர்ஹானா படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்து இருக்கின்றனர்.
இதனால் படம் பார்க்க நினைத்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.