இந்திய சினிமா தற்போது Pan India என்ற கலாச்சாரத்திற்கு மாற, தமிழிலிருந்து தெலுங்கு, தெலுங்கிலிருந்து தமிழ் என பல கூட்டணிகள் அமைய, தற்போது நாக சைதன்யா தமிழில் காலடி எடுத்து வைத்துள்ளார், படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
நாக சைதன்யா ஹெட் கான்ஸ்டபுளாக வேலைப்பார்த்து வருகிறார், இவர் அதே ஊரில் இருக்கு கீர்த்தி ஷெட்டியை காதலிக்கின்றார், ஆனால், கீர்த்தி வீட்டிற்கு இது பிடிக்காமல் வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர்.
நாக சைதன்யா மேல் அதிகாரிக்கு இவரை சுத்தமாக பிடிக்காமல் இருக்க, ஒரு நாள் ரோட்டில் அரவிந்த் சாமி, சம்பத் ராஜ் இருவரும் அடித்துக்கொள்கின்றனர்.
இவர்கள் இருவரையும் நாக சைதன்யா பிடித்து, சிறையில் வைக்க, பிறகு தான் தெரிகிறது சம்பத் ராஜ் CBI ஆபிசர் என்று. ஆனால், போலிஸ் சம்பத்தை கொல்ல முயற்சித்து அரவிந்த் சாமியை காப்பாற்ற வர, நாக சைதன்யா எல்லோரையும் அடித்து அங்கிருந்து இருவரையும் தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறார்.
கீர்த்தி ஷெட்டியும் இதே நேரத்தில் வீட்டை விட்டு ஓடி வர, நாக சைதன்யா என்ன செய்தார், அரவிந்த் சாமி யார் எதற்காக அரசாங்கமே அவரை காப்பாற்ற நினைக்கிறது என்பது மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நாக சைதன்யா முதலில் தமிழுக்கு வந்ததற்கு ஒரு வெல்கம், கொஞ்சம் டப்பிங் குறை இருந்தாலும், அவரின் பெர்ப்பாமன்ஸால் தூக்கி நிறுத்துகிறார், ஒரு ஹெட் கான்ஸ்டபுளாக வந்து படம் முழுவதும் பரபரப்பாக கொண்டு செல்வதில் முக்கிய பங்கு பெறுகிறார்.
அரவிந்த்சாமி சாகும் நேரத்தில் கூட அவர் அடிக்கும் கவுண்டர் தியேட்டரில் விசில் சத்தம், படம் 90களில் நடப்பதால் டெக்னாலாஜி எதுவுமில்லாதது படத்தின் திரைக்கதைக்கு ஒரு பலம்.
அதே நேரத்தில் படத்தின் முதல் அரை மணி நேரம் சோதனை தான், அரவிந்த் சாமி வரும் வரை படம் மந்தமாகவே செல்கிறது.
சரத்குமார், ஜீவா கேமியோ, அதை விட ஏஜெண்ட் ப்லிப்ஸ் என விக்ரம் ஸ்டைலில் வரும் ராம்கி என அங்கங்க சர்ப்ரைஸ் உள்ளது.
இரண்டாம் பாதி என்ன தான் விறுவிறுப்பான கதையாக சென்றாலும் பல படங்களில் பார்த்த காட்சிகள் டுவிஸ்ட்கள் என்று நம் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
பாடல்கள் ஒன்று கூட மனதில் ஒட்ட வில்லை, கதிர் ஒளிப்பதிவு பல இடங்களில் செட் என்பது அப்டியே தெரிகறது.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகளின் நடிப்பு
அரவிந்த் சாமி கவுண்டர் வசனங்கள்
படத்தின் ஸ்டெண்ட் காட்சிகள்.
பல்ப்ஸ்
ஏற்கனவே தெரிந்த காட்சிகள்
படத்தின் பாடல்கள் பெரும் தொய்வு.
படத்தின் முதல் அரை மணி நேரம்
மொத்தத்தில் கஸ்டடி விறுவிறுப்பாக சென்றாலும் எதோ மனதில் ஒட்டாத உணர்வு.
ரேட்டிங்: 2.5/5