பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறிய மூர்த்தி!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்துவிட்டனர். முதல் தம்பி ஜீவா சண்டை போட்டுவிட்டு மாமியார் வீட்டிலேயே இறந்துவிடுகிறார். கடைசி தம்பி கண்ணன் அவர் மனைவி ஐஸ்வர்யா பேச்சை கேட்டு வெளியேறிவிடுகிறார்.

அதனால் தற்போது மூர்த்தி மற்றும் கதிர் ஆகியோர் மட்டுமே ஒன்றாக இருந்தனர். தற்போது அதற்கும் முல்லையின் அம்மா மூலமாக பிரச்சனை வந்துவிட்டது.

வெளியேற முடிவு
ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பமான பெண்கள் இருக்கக்கூடாது என சொல்லும் முல்லையின் அம்மா, தனத்தை அவரது அம்மா வீட்டுக்கு சென்று இருக்கும்படி சொல்கிறார். அந்த விஷயத்தை தனம் கண்ணீருடன் மூர்த்தியிடம் சொல்கிறார். அவரும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த விஷயம் பற்றி கதிர் – முல்லையிடம் சொல்ல அவர்கள் அதிர்ச்சி ஆகின்றனர். அதன் பின் கதிர் முல்லையின் அம்மாவை எச்சரித்து இருப்பதும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் வந்து இருக்கிறது. இதோ..