11 வயது குறைந்தவரை திருமணம் செய்ததால் சங்கடம் அடைந்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் தற்போது பாபுலர் ஆனவர். அவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் வாடகை தாய் மூலமாக தற்போது ஒரு மகளும் பெற்று இருக்கின்றனர். மகள் மல்டி மேரிக்காக தனது கெரியரை கூட விட தயார் என பிரியங்கா சோப்ரா கூறி இருக்கிறார்.

வயது வித்தியாசம்
பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ்சை விட 10 வயது மூத்தவர். அவர்கள் திருமணம் நடந்த நேரத்திலேயே அது பேசுபொருளானது.

பிரியங்கா சோப்ரா 18 வயதில் உலக அழகி பட்டம் வென்ற போது நிக் ஜோனஸ் வயது வெறும் 7 தான். பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றதை அப்போது நிக் ஜோனஸ் டிவியில் பார்த்து கொண்டிருருந்தாராம்.

இந்த விஷயத்தை பிரியங்கா சோப்ராவின் மாமியார் தன்னிடம் கூற, அதற்க்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் சங்கடத்தில் இருந்ததாக அவரே பேட்டியில் கூறி இருக்கிறார்.