முதன் முறையாக விஜய் தொலைக்காட்சிக்கு சென்ற யுவன்சங்கர் ராஜா மனைவி

யுவன் ஷங்கர் ராஜா
இசை இப்போது எல்லோடமும் நெருக்கமாக இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசையை ரசிக்கிறார்கள். பட பாடல்களை பாடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படிபட்ட இசையை தனது துறையாக கொண்டு இதுநாள் வரை கலக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா.

90 காலகட்டத்தில் மக்களுக்கு வரப்பிரசாதமாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், இப்போதும் அவரது பாடல்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள்.

லேட்டஸ்ட் ஷோ
அண்மையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியின் நடுவில் யுவனின் மனைவி வீடியோ காலில் நிகழ்ச்சியில் தோன்றி அவரைப் பற்றிய சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதோ அவர் இடம்பெறும் நிகழ்ச்சியின் புரொமோ,