முடிவுக்கு வரும் சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்

சன் டிவி தொடர்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன. ரசிகர்களை கவர்வதற்காக சன் டிவி தொடர்களில் தொடர்ந்து பல விதமான ட்விஸ்டுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

தாலாட்டு சீரியல் தற்போது 620 எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதில் ஸ்ருதி ராஜ், கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

முடியும் ‘தாலாட்டு’
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி தாலாட்டு சீரியல் விரைவில் முடிக்கப்பட இருக்கிறதாம்.

அதற்கு பதிலாக விரைவில் ஒரு புது சீரியலை சன் டிவி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.