பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்

பாரதி கண்ணம்மா
பிரவீன் பென்னட் இயக்க விஜய் தொலைக்காட்சியில் பல எபிசோடுகள் ஒளிபரப்பாகிய தொடர் பாரதி கண்ணம்மா.

ஆரம்பத்தில் என்னவோ நல்ல கதையுடன் தொடங்கிய இந்த தொடர் போக போக கதையே இல்லாமல் ஒரே ஒரு டுவிஸ்டை வைத்து ஒளிபரப்பாகி வந்தது.

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அட இந்த சீரியலை முடியுங்கள் என கெஞ்சம் அளவிற்கு தொடர் இழுத்துக் கொண்டே சென்றது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டது, இப்போது 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இறந்த பிரபலம்
சரவணன்-மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்று பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. 70 வயதாகும் இவர் இன்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வர சில தினங்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய அவர் இன்று தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.