சீதா ராமம்
கடந்த பிப்ரவரி 20ம் தேதி புதுமுக கலைஞர்களுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் சீதா ராமன்.
கந்தசாமி என்பவர் கதையை இயக்க பிரியங்கா நல்காரி மற்றும் ஜே இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்கள். இதில் முக்கியமான வேடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மா நடித்து வந்தார்.
தொடர் ஆரம்பித்த நாள் முதல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கு நல்ல TRP எல்லாம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் தான் தொடரில் இருந்து முக்கிய நாயகியான பிரியங்கா விலகிய செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலகிய காரணம்
அவர் விலகிய காரணம் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. கடந்த மார்ச் மாதம் பிரியங்காவிற்கு மிகவும் சிம்பிளாக மலேசியாவில் திருமணம் நடந்தது.
அவரது கணவர் இனி நடிக்க வேண்டாம் என பிரியங்காவிடம் கூறவே அவரும் தனது கணவர் பேச்சை தட்டாமல் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துவிட்டார் என கூறப்படுகிறது.