சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். படித்தது மருத்துவ படிப்பு என்றாலும் சினிமாவில் மட்டுமே அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது சாய் பல்லவி தான் காதல் கடிதம் எழுதி சிக்கிக்கொண்டது பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
7ம் வகுப்பில்..
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும்போது உடன் படிக்கும் ஒரு பையன் மீது சாய் பல்லவிக்கு அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதாம். அதை எப்படி சொல்வது என தெரியாமல் அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதை கொடுக்க தைரியம் இல்லாமல் அதை தன் புத்தகத்திலேயே வைத்துவிட்டாராம்.
அதை அவரது அம்மா இப்படியே பார்த்துவிட சாய் பல்லவிக்கு அம்மாவிடம் இருந்து அடி உதை கிடைத்து இருக்கிறது.
அதற்கு பிறகு அம்மாவிடம் அடி வாங்கும் அளவுக்கு வேறு எந்த தவறும் செய்யவே இல்லை என அவர் கூறி இருக்கிறார்.