நடிகை ஸ்ருதி ராஜ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எத்தனையோ நடிகைகள் உள்ளார்கள். சிலர் திருமணம் குழந்தை என்ற பிறகும் நடித்து அசத்தி வருகிறார்கள்.
ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை 40 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் இன்னும் நடித்து வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை, நடிகை ஸ்ருதி ராஜ் தான்.
ஆபிஸ், தென்றல் என பல ஹிட்டாக தொடர்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
என்ன காரணம்
திருமணம் இதுவரை செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டால், எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது.
அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது, எனவே திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை, அப்படியே செல்கிறேன்.
என்னைப் பற்றி, எனது திருமணம் குறித்து எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூலாக கூறுகிறாராம்.