நடிகை வரவுக்கரசி
சில நடிகர்களை மக்களால் எந்த நிலைமையிலும் மறக்க முடியாது, அப்படிபட்ட ஒரு நடிகை தான் வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இப்போது சீரியல்களில் அதிகம் நடிக்கிறார். நாயகி, வில்லி, அம்மா கதாபாத்திரம் என எந்த விதமாக வேடம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்கக் கூடியவர் வடிவுக்கரசி.
சமீபத்திய பேட்டி
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது, ஆசிரியராக நான் முதலில் எனது பயணத்தை தொடங்கினேன், ஆனால் சம்பளம் என் குடும்பத்திற்கு போதவில்லை. பின் துணிக்கடையில் வேலை செய்தேன், ஒரு மேனேஜ்மென்டில் கீப்பிங் வேலையும் செய்தேன்.
அப்பா, சித்தப்பா திரைத்துறையில் தான் இருந்தார்கள், இதில் ஏற்பட்ட நஷ்டத்தால் தான் எங்களது வாழ்க்கை அப்படியே மாறி ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.
அந்த சமயத்தில் பேப்பரில் நடிக்க விளம்பர வந்தது. ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை, அதேசமயம் எனக்கு காதல் சீன் வராது, டான்ஸ் ஆட வராது, எனவே தான் அம்மா, அக்கா போன்ற கதாபத்திரங்களில் நடித்தேன்.
எனக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டோம், என்னுடைய மகளை என் அம்மா தான் வளர்ந்து வந்தார். எப்போதுமே யாரிடம் சென்று நிற்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம் என பேசியுள்ளார்.