ரவீந்தர்-மகாலட்சுமி
லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர். இவரது பெயர் சொன்னாலே மக்களுக்கு இவரது உடல் பருமன் தான் நியாபகம் வரும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, வனிதா-பீட்டர் பால் திருமணம் போன்ற விஷயங்கள் குறித்து பேசி அதிகம் சமூக வலைதளங்களில் மக்களால் பேசப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவருடன் மறுமணம் நடந்தது.
இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான், அன்றிலிருந்து இருவரும் காதல் பொங்க புகைப்படங்கள் வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என இருந்தார்கள்.
சோகமான பதிவு
திடீரென ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என பதிவு போட்டுள்ளார்.
எனவே ரசிகர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களா என பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல் ரவீந்தர் எந்த பதிவு போட்டாலும் அதற்கு கீழே கமெண்ட் செய்யும் மகாலட்சுமி இப்போது எல்லாம் எதுவும் பதிவிடுவது இல்லை.
View this post on Instagram