தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்பாபு. இவர் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென இவர் உயிரிழந்துவிட்டார் என செய்தி பரவியது. ஆனால், அது உண்மையில்லை, வெறும் வதந்திதான் என கூறப்பட்டது.
சரத்பாபு மரணம்
இந்நிலையில், தற்போது நடிகர் சரத்பாபு {வயது 71} மரணமடைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இதை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையும் உறுதி செய்துள்ளதாம். பல உறுப்பு செயல் இழந்ததால் அவர் உயிரிழந்தார்.
அவருடைய மறைவு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகர் சரத்பாபு, தமிழில் வெளிவந்த அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.