பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாமனார் யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனராக வளர்த்து இருப்பவர். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் அவர் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் படம் என்று கூட சொல்லலாம். மேலும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல முக்கிய ஹீரோக்களே வெயிட்டிங்.

மாமனார்
லொகேஷ் கனகராஜின் மாமனார் யார் தெரியுமா? சௌந்தர் என்பவர் தான். அவர் நடிகர் விஜயகாந்துக்கு நண்பராக இருந்தவர் என்றும், பல படங்களில் நிர்வாக தயாரிப்பாளர் ஆக பணியாற்றி இருக்கிறாராம்.

சமீபத்தில் மரணமடைந்த நடிகர் மனோபாலா இயக்கிய செண்பக தோட்டம் என்ற படத்தில் அவர் தான் நிர்வாக தயாரிப்பாளர் ஆக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.