ஃபர்ஹானா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான படம் தான் ஃபர்ஹானா. இப்படம் கடந்த மே 12 -ம் தேதி வெளியானது.
இப்படத்தில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி பல சர்ச்சை எழுந்தது.
இதனால் சில திரையரங்குகளில் ஃபர்ஹானா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. மேலும் படம் வெளியாகும் சில திரையரங்குகளில் பாதுகாப்பும் போடப்பட்டது.
வசூல்
இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் நாட்டின் gross collection ரூபாய் 50 லட்சம் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.