பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகளின் கதையை மையமாக கொண்டு கூட்டுக் குடும்பத்தை அழகாக காட்டி வந்த இந்த கதையில் இப்போது நிறைய அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது.
கண்ணன், ஜீவா இருவரும் வெளியேறிய பின் நாம் பழையபடி இருக்க முடியாதா என ஏங்கி வருகிறார்கள். இதற்கு இடையில் கண்ணன், தனது மனைவி ஐஸ்வர்யா பேச்சை கேட்டு கடனாளியாகிறார்.
புதிய புரொமோ
வங்கி அதிகாரிகள் கண்ணனிடம் கடனை கட்ட கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் கண்ணனை அடிக்கிறார்கள். கண்ணன் இதுகுறித்து கதிரிடம் கூற அவரோ கோபத்தில் வங்கி அதிகாரிகளை அடித்துவிடுகிறார்.
இதனால் வங்கி அதிகாரிகள் கதிர் மீது புகார் கொடுக்க அவரை போலீசார் கைது செய்கிறார்கள்.
இந்த பரபரப்பான புரொமோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
View this post on Instagram