இர்பான்
ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான்.
அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.
விபத்து
தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.
இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.