ஆர்யா
“விருமன்” படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் தான் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.
இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா, ஹீரோயினாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளனர்.
இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.
சார்பட்டா 2
இந்நிலையில் கோயம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆர்யா மட்டும் நடிகை சித்தி இத்னானி “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில், ஆர்யாவிடம் அடுத்து நடிக்க இருக்கும் படங்களை பற்றி கேள்வி கேட்ட போது விரைவில் சார்பட்டா 2 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகிவிடும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என ஆர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.