நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு சினிமாவில் தான் பாப்புலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் அளவிற்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு வந்திருக்கிறது. Citadel என்ற வெப் சீரிஸில் அவர் தற்போது நடித்து வருகிறார்.
அந்தத் தொடரில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் வருண் தவான் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அம்மா ரோலில் சமந்தா
Citadel வெப் சீரிஸில் சமந்தாவின் ரோல் என்ன என்பது தற்போது வரை வெளியிடப்படாமல் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த சில புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி வைரலாகி இருக்கின்றன. அதனால் அவரது ரோல் என்ன என்பது பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சமந்தா பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக நடிக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வருண் தான் அப்பா ரோலில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
80கள் அல்லது 90களில் நடைபெறும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா மற்றும் வருண்தவான் வருவார்கள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.