கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.
அந்த விழாவுக்கு கீர்த்தி தாமதமாக வந்து இருந்தார். மும்பையில் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு மாலை தான் சென்னைக்கு திரும்பியதாக கூறி இருக்கிறார்.
கேள்வியால் கோபம்
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என பரவி வரும் தகவலை பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர்.
“அதற்கு கோபப்பட்டு பதில் சொன்ன அவர் “ஏங்க.. என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே இருங்கீங்க.. நடக்குறப்ப நானே சொல்றேன்” என கூறி இருக்கிறார்.