காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் கதாநாயகனாக சுவாமிநாதன் என்பவர் நடிக்க பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள விஜய் டிவி சீரியல்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுஜாதா சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதில் இவரா
அவருக்கு பதிலாக வீனா வெங்கடேஷ் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் தான் முதன் முதலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஆனால், திடீரென இவர் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக நடிகை சுஜாதா மீனாட்சியாக நடிக்க வந்தார். தற்போது சுஜாதா சீரியலில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மீண்டும் வீனா வெங்கடேஷ் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,