மீண்டும் குக் வித் கோமாளியில் மணிமேகலை! ரசிகர்களை கொண்டாட வைத்த ப்ரொமோ

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. பைனலிஸ்ட் யார் யார் என தேர்வு செய்யும் படலம் தொடங்கிவிட்டது. முதல் ஆளாக சிவாங்கி பைனலுக்கு முன்னேறி இருக்கிறார்.

அடுத்தடுத்து பைனலிஸ்ட் முடிவாகி, வைல்டு கார்டு சுற்றும் நடைபெற இருக்கிறது.

மீண்டும் மணிமேகலை
இந்நிலையில் தற்போது இந்த வார எபிசொடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் சரத்குமார் CWC செட்டுக்கு வந்திருக்கிறார்.

மேலும் முன்பு ஷோவை விட்டு வெளியேறிய மணிமேகலையும் தற்போது மீண்டும் வந்திருக்கறார். மணிமேகலையை மீண்டும் பார்த்தது பற்றி கமெண்டில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.