மகளுக்காக பிரபுதேவா செய்த விடயம்

பிரபுதேவா
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல முகங்களை கொண்ட பிரபுதேவாவுக்கு முதல் மனைவி உடன் மூன்று மகன்கள் இருக்கின்றனர். முதல் மனைவியை பிரிந்த பிறகு அவர் நடிகை நயன்தாரா உடன் காதல் இருந்தார்.

அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில் ஹிமானி என்பவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டாம் மனைவி உடன் பிரபுதேவாவுக்கு மகள் பிறந்திருக்கிறார்.

அது பற்றிய செய்தி சமீபத்தில் வைரல் ஆனது. அதை பிரபுதேவாவும் உறுதி செய்திருக்கிறார்.

மகளுக்காக..
தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கும் பிரபுதேவா, “நான் தற்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். தற்போது மகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட நான் எனது வேலைபளுவை குறைத்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நிற்காமல் ஓடிய நான் மகளுக்காக இதை செய்கிறேன்” என கூறி இருக்கிறார்.