சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்த கபாலி படம் 2016ல் வெளிவந்தது. பா.ரஞ்சித் இயக்கிய அந்த படத்திற்கு விமர்சன ரீதியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் வசூல் 1000 கோடிக்கும் அதிகம் என தயாரிப்பாளர் தாணு பேட்டி அளித்தார்.
கபாலி படத்தின் தெலுங்கு உரிமையை கே.பி.சவுத்ரி என்பவர் வாங்கி இருந்தார். பட விநியோகஸ்தராக தொழில் செய்து வந்த அவர் நஷ்டம் காரணமாக அந்த தொழிலையே விட்டுவிட்டாராம்.
போதைபொருள் விற்பனை
சினிமாவை விட்டுவிட்டு கோவாவில் செட்டில் ஆன கே.பி.சவுத்ரி தற்போது கஞ்சா வழக்கில் Cyberabad போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
அவரிடம் 90 பாக்கெட்டுகளில் கோகைன் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதன் எடை 82.75 கிராம்கள். அவர் வீட்டை விட்டு வெளியில் வரும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு அவர் போதைப்பொருளை விற்க கிளம்பிய போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கின்றனர்.
இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவாவில் இருந்து போதை பொருள் வாங்கி வந்து சவுத்ரி ஹைதராபாத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.