இயக்குனர் சுந்தர்.சி இயக்குவதாக பல வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் சங்கமித்ரா. 2017 கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தில் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த படம் அடுத்த பாகுபலியாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அப்போதே எழுந்தது.
ஆனால் தயாரிப்பாளர்களுக்கு வந்த சிக்கல்களால் படம் பல வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் மெயின் ரோல்களில் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நடிகர்கள் மாற்றப்பட்டு ஆர்யா, விஷால் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். ஸ்ருதி ஹாசனுக்கு பதில் இன்னொரு டாப் ஹீரோயின் இந்த படத்தில இணைய இருக்கிறார்.
எப்போது தொடங்கும்?
தற்போது சுந்தர் சி தான் இயக்கி வரும் தலைநகரம் 2 படத்தின் ரிலீஸுக்காக தயாராகி வருகிறார். தற்போது அவர் அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் சங்கமித்ரா படம் பற்ற பேசி இருக்கிறார்.
இந்த வருடத்தின் இறுதியில் சங்கமித்ரா பட ஷூட்டிங் தொடங்கும் என கூறி இருக்கும் அவர், படம் முடிய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக தான் வெளிவரும் என்றும் கூறி இருக்கிறார்.