காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு என திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.இவர் தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டினார்.
இவர் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனால் குழந்தைக்கு தாயின் அன்பை கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருக்கிறதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி முடிவு
இதையடுத்து குழந்தைக்காக சினிமாவை விட்டு முழுமையாக விலக காஜல் அகர்வால் முடிவு செய்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை அவரது கணவரும் ஏற்றுக்கொண்டு விட்டாராம்.
மேலும், காஜல் அகர்வால் இதுகுறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தியன் 2, பாலா கிருஷ்ணாவுக்கு ஜோடியாக பகவத் கேசரி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என தெலுங்கு திரை வட்டாரங்கள் பேசுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன முடிவு செய்யப்போகிறார் என்று..