லால் சலாம் படப்பிடிபில் வைரலாகும் ரஜினி

ரஜினி
ரஜினி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று திரைக்கு வெளிவருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகிவரும் “லால் சலாம்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

வைரலாகும் வீடியோ
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. லால் சலாம் படப்பிடிப்பு தலத்தில் திடீரென ரசிகர்கள் ரஜினியை சூழ்ந்துகொண்டனர். அப்போது, ரஜினி மொய்தீன் பாய் தோற்றத்தில் ஸ்டைலாக நடந்து வந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் இன்றும் ரஜினி ஸ்டைல் குறையாமல் இருக்கிறார் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..