தொகுப்பாளினி ரம்யா
விஜய் தொலைக்காட்சியின் மூலம் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்கள், அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி ரம்யா.
அதேபோல் 2007ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்தார். அதன்பின் ஒரு காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
தொகுப்பாளர், நடிகை என்பதை தாண்டி இப்போது ரம்யா அதிகம் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
பிரபலத்திற்கு காயம்
சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் போது தனக்கு நேர்ந்த விபத்து குறித்து ரம்யா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
தசைகளை குறி வைக்கும் சவாலான உடற்பயிற்சி மேற்கொண்டபோது உயரமான கால் குரூப்ஸ் பிரிட்ஜை செய்ய முயற்சித்ததால் காயம் ஏற்பட்டது. உடற்பயிற்சியின் போது என்னுடைய இடுப்பில் பொருத்திருந்து உடற்பயிற்சியின் கிலோ டெம்பில் தவறுதலாக உருண்டு என்னுடைய முகத்தில் விழுந்தது.
கிட்டத்தட்ட எடையின் பாதி என்னுடைய கழுத்தை நெரித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உடனடியாக எனக்கு உதவி செய்தார்கள்.
எனக்கு எந்த பெரிய விளைவுகளும் ஏற்படவில்லை என கூறி தனக்கு ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.