ரசிகர் கேள்விக்கு கடுமையாக நடந்து கொண்டு பிரபல நடிகர் – ஏன் தெரியுமா?

சித்தார்த்
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை, அரண்மனை 2 என பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் “டக்கர்”. இப்படத்தை கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடுமையாக நடந்து கொண்ட நடிகர்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சித்தார்த்திடம் ரசிகர் ஒருவர் “நீங்கள் தற்போதெல்லாம் அரசியல் பற்றி எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியா இருப்பது ஏன்?” என கேட்டுள்ளார்.

இதற்கு நடிகர் சித்தார்த் “எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என ஆவேசமாக கூறியுள்ளார்.

அவரின் கோபமான பதில் அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும், அவ்வப்போது நடிகர் சித்தார்த் அரசியல் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.