நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கும் முனைப்பில் இருப்பதாக கூறட்டும் நிலையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக பல்வேறு விஷயங்களை செய்ய தொடங்கி இருக்கிறார்.
பொதுத்தீர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை வரவைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்க இருக்கிறார் விஜய். அந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
ரசிகர்களுக்கு உத்தரவு
இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு விஜய் ஒரு முக்கிய உத்தரவை போட்டிருக்கிறார். ரசிகர்கள் யாரும் அந்த விழாவிற்கு பேனர், கட் அவுட் வைக்க கூடாது என விஜய் கூறி இருக்கிறார்.
வழக்கமாக விஜய் நடிக்கும் பட விழா நடந்தால் சாலை முழுக்க அதிக பேனர்கள் தான் இருக்கும். அதை எல்லாம் தடுக்க தான் விஜய் இப்படி ஒரு உத்தரவை போட்டிருக்கிறார்.