பாகுபலி படம் மூலம் இந்தியளவில் பிரபலமானார் பிரபாஸ். இதனால் இவருக்கென்றே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட் உருவாகியது.
தோல்வி படங்கள்
பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் சாஹா எனும் திரைப்படம் வெளிவந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது. இதனால் ரசிகர்களுக்கும் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால், கண்டிப்பாக அடுத்த படம் பிரபாஸ் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நடித்த திரைப்படம் தான் ராதே ஷ்யாம். இப்படமும் படுதோல்வியடைந்தது. இப்படியொரு நிலையில், பிரபாஸ் ரசிகர்களால் கண்டிப்பாக ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் ஆதிபுருஷ்.
இன்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்களிடம் படுமோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனத்தை சந்தித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக முதலில் ரூ. 500 கோடி செலவு செய்தனர். பின் VFX சரியில்லை என கூறப்பட்டதினால் ரூ. 100 கோடி செலவு செய்து அதை சரி செய்தனர்.
வெற்றி கிடைக்குமா
ரூ. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளே மக்கள் மத்தியில் தோல்விக்கான அறிகுறிகளுடன் விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒரு வேலை இப்படம் சரியாக போகவில்லை என்றால், பாகுபலி படத்திற்கு பின் சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் என தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை பிரபாஸ் கொடுத்துள்ளார் என கூறப்படும்.
பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் சலார் திரைப்படமாவது வெற்றியை அவருக்கு தேடி தருமா என்று..