2002 -ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் தனுஷ்.
இவர் உடல் தோற்றத்தை வைத்து பல கேலி கிண்டல் நடந்தாலும் அதை பொருட் படுத்தாமல் பல ஹிட் படங்கள் கொடுத்து தனக்கென எக்கச்சக்க ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
தற்போது இவர் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 2008 -ம் ஆண்டு தனுஷ், ரகுவரன் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். ஆனால் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது நடிகை ஜோதிகா தானாம். சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.