ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? Twitter விமர்சனம் இதோ

ஆதிபுருஷ்
ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து, இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் திரை விமர்சனம் வெளியாகியுள்ளது.

Twitter விமர்சனம்
இப்படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். இதில் சிலர் படம் நன்றாக இருக்கிறது ஒரு முறை பார்க்கலாம் என கூறியுள்ளனர்.

ஆனாலும், பெரும்பான்மையான ரசிகர்கள், மோசமான திரைக்கதை வடிவமைப்பு என்றும், எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட திருப்திப்படுத்தவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

அதே போல் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸை இப்படி தான் நடிக்க வைப்பதா என பிரபாஸ் ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் படத்திற்கு 2/5 என்ற கணக்கில் தான் ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள்.

முக்கியமாக VFX சொதப்பியுள்ளது என்றும், இராவணன் கதாபாத்திரத்தை மோசமாக வடிவமைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டு கூறுகிறார்கள். இதோ Twitter விமர்சனம்.