ஆதிபுருஷ் படத்திற்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபாஸ்
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கு மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அதற்கு பிறகு அவர் நடித்த படங்களில் எல்லாம் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார்.

பாகுபலி படத்திற்கு அவர் 25 கோடி ருபாய் சம்பளமாக பெற்றார். ஆனால் அதற்காக அவர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 5 வருடங்கள் ஒதுக்கி இருந்தார்.

ஆனால் அதற்கு பிறகு பிரபாஸ் நடித்த படங்கள் தோல்வி ஆனதால் அவர் தனது சம்பளத்தை திருப்பி கொடுக்கும் நிலையம் வந்தது. ராதே ஷ்யாம் படம் தோல்வி ஆனதால் அதன் 50% சம்பளத்தை அவர் விட்டுக்கொடுத்தாராம்.

ஆதிபுருஷ் சம்பளம்
ஆதிபுருஷ் படத்திற்காக பிரபாஸ் மிகப்பெரிய தொகையை வாங்கி இருக்கிறார். அவருக்கு 150 கோடி சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. அதனால் பட்ஜெட்டில் மிகப்பெரிய பங்கு பிரபாஸ் சம்பளத்திற்காக செலவாகி இருக்கிறது.

தற்போது ஆதிபுருஷ் படம் முதல் நாளிலேயே 140 கோடி ரூபாய் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.