அஞ்சலி
கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலம் ஆனவர் அஞ்சலி. அவர் நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
முன்னணி ஹீரோ படங்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனது ரோலுக்கு தகுந்த முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களாக அஞ்சலி தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படங்கள் பட்டியலிட்டால் லிஸ்ட் நீளமாகவே வரும்.
சொத்து மதிப்பு
தற்போது அஞ்சலி ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஹைதராபாத்தில் ஒரு வீடு மற்றும் சென்னையில் ஒரு வீடு வாங்கி வைத்து இருக்கிறாராம்.
மேலும் அவரிடம் இரண்டு சொகுசு கார்களும் இருக்கிறது. அஞ்சலியிடம் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சலிக்கு ஷாப்பிங் செய்வது அதிகம் பிடிக்கும் என்பதால் அதற்காக அதிகம் செலவு செய்வதும் குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு பிரபல ஹீரோ உடன் காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரேக்கப் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.