சின்னத்திரைக்கு செல்லும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடிப்பில் 2012 வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வைத்து நானும் ரெளடி தான் என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.