நடிகர் தனுஸிற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து செய்வதற்கு நடிகை சமந்தா தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்து சுமார் 18 வருடங்கள் கழித்த நிலையில், கடந்த வாரம் விவாகரத்து செய்து கொண்டுள்ளார்கள்.
விவாகரத்து செய்யப் போவதாக தனுஸ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அப்போது நன்றாக இருந்த இந்த ஜோடிகள் பிரிவதற்கு என்ன காரணம் என தேடிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் சக நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதால் இந்த பிரிவு பல விமர்சனங்கள் எழுந்தன.
சமந்தாவுடன் நெருக்கம்
இருந்த போதிலும் தற்போது ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கேட்கும் போது சற்று உண்மை போல் விளங்குகின்றது.
அதில், தங்கமகன்” திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் தனுஸ் – சமந்தா இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியில் வந்து விட்டார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார். அதே வருடத்தில் ஐஸ்வர்யாவும் தனுஸிடம் இருந்து விலக போவதாக அறிவித்தார்.
இப்படியொரு நிலையில், சமந்தாவின் நெருக்கத்தை காரணம் காட்டி தான் ஐஸ்வர்யா ரஜினிகாந் தனுஸை பிரிந்துள்ளார் என சர்ச்சை நாயகன் பயில்வான கூறுகிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ பயில்வான் யாரை தான் இப்படி கோர்த்து விடல..” என கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.