திருமணத்திற்கு பின்னர் ஆசை பட நாயகி எப்படி உள்ளார் பாருங்கள்

நடிகை சுவலட்சுமி
90ஸ் கிட்ஸ்களின் ஆசை நாயகியாக ஏன் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் சுவலட்சுமி.

கடந்த 1995ம் ஆண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பெங்காலி சினிமாவில் ஓட்டுறான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின்பு கோகுலத்தில் சீதை, கல்கி, விஜய்யுடன் லவ் டுடே, சந்தோசம், என் ஆசை ரோஸாவே உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நாயகியானார்.

பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சூலம் என்ற சன் தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.

குடும்பம்
பின் சுவலட்சுமி கலிபோர்னியாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை சுவலட்சுமி இப்போது எப்படி உள்ளார் என்பது தெரியவில்லை, ஆனால் திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட அவரது சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.