போர் தொழில்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில்.
க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
ராட்சசன் படத்திற்கு பின் ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படமாக தமிழ் சினிமாவிற்கு போர் தொழில் கிடைத்துள்ளது என ரசிகர்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள்.
உலகளவில் இப்படம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சாதனையை முக்கிய இடத்தில் முறியடித்துள்ளது.
துணிவை முறியடித்த போர் தொழில்
ஆம், அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது போர் தொழில் திரைப்படம் கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ. 5.1 கோடிக்கும் மேல் வசூல் செய்து துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது.