அர்ஜுன்-தம்பி ராமைய்யா
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி கிங் தம்பி ராமைய்யா இருவரின் வீட்டிலும் விசேஷம் நடக்க இருக்கிறது. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமைய்யா மகன் உமாபதி இருவரும் காதலிக்கிறார்களாம்.
இந்த தகவல் சில தினங்களுக்கு முன் வெளியாக இந்த புதிய ஜோடியை ஒன்றாக காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
அர்ஜுன் Survivor ஷோ தொகுத்து வழங்கியபோது உமாபதியுடன் பழகியுள்ளதால் அவருக்கு பிடித்து போக மகள் திருமணத்திற்கும் ஓகே கூறியுள்ளாராம்.
திருமண தேதி
புதிய ஜோடி காதலிக்கும் செய்தி வந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்தும் தகவல் வந்துள்ளது. அதாவது இந்த வருடம் நவம்பர் மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம்.
பின் திருமணம் 2024 அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.