சூர்யவம்ச பட இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்

சூர்யவம்சம்
தமிழ் சினிமாவில் இன்றும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இருப்பது சூர்யவம்சம் திரைப்படம். இப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியுள்ளார்.

இதில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் 1997ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சரத்குமார் ட்விட்டரில் பதிவு ஒன்றை டிவீட் செய்துள்ளார்.

இரண்டாம் பாகம்
அதில், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருந்து, இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள், என ஒட்டுமொத்த திரைப்படத்தை ரசித்து, மாபெரும் வெற்றி அளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

இத்துடன் சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.