பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா பாண்டிச்சேரியில் ஒரு பெரிய திருமணத்திற்கு சமையல் செய்ய சென்று இருக்கிறார். அதே விழாவுக்கு கோபி மற்றும் ராதிகா இருவரும் சென்று இருக்கின்றனர்.
அங்கு பாக்யா உடன் பழனிச்சாமி நெருக்கமாக பேசுவதை பார்த்து கோபி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் எல்லாம் பாக்யாவின் சமையல் ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசி வருகின்றனர். அதை பார்த்து கோபிக்கு வயிற்றெரிச்சல் ஆகிறது.
அது ஒரு பக்கம் இருக்க ராதிகாவை இம்ப்ரெஸ் செய்ய ஒரு வைர நெக்லஸ் வாங்கி வந்து சர்ப்ரைசாக கிப்ட் கொடுக்கிறார் கோபி.
பாக்யாவுக்கு சிக்கல்
மேலும் மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினர் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகாவுக்கும் கோபியும் இருக்கின்றனர்.
அப்போது மலேசியாவில் இருந்தும் சில விருந்தினர்கள் நாளை வர இருப்பதாக சொல்கின்றனர். அதை கேட்ட கோபி ஒரு பிளான் போடுகிறார். அவர்களுக்கு அவங்க நாட்டு உணவு வகைகளை கொடுக்கலாமே, அதையும் பாக்யாவை வைத்து சமைக்க சொல்லுங்க என கோபி கூறுகிறார்.
பாக்யாவுக்கு மலேஷிய உணவு சமைக்க தெரியாமல் எல்லோர் முன்பும் அசிங்கப்பட வேண்டும் என்று தான் இப்படி ஒரு சிக்கலை கோபி ஏற்படுத்துகிறார்.
இனி என்ன நடக்கும் என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.