பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த ஷோவில் பங்கேற்கும் போட்டியாளராலும் மிக பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிடுகிறார்கள். அதனாலேயே அந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங்.
பிக் பாஸ் 7
தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் போட்டியாளர்
தற்போது பிக் பாஸ் 7ம் சீசனுக்கு யாரெல்லாம் போட்டியாளராக வர இருக்கின்றனர் என உத்தேச பட்டியல் பரவி வருகிறது.
அதில் முதல் ஆளாக பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தான் வர போகிறார் என கூறப்படுகிறது. ‘பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்தான்..’ என செய்தி வாசித்து பாப்புலர் ஆன ரஞ்சித் பிக் பாஸ் வந்தால் அவருக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.